2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

கல்வி சீர்திருத்த திட்டங்களை மதிப்பாய்வு செய்ய தீர்மானம்

Freelancer   / 2024 நவம்பர் 22 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான  திட்டங்களை மறுஆய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. 

 தேசிய கல்வி நிறுவனம் (NIE) போன்ற பல குழுக்கள் மற்றும் நிறுவனங்களால் அண்மைக்காலமாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

 எனினும், அந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையை எட்டவில்லை. 

 இந்த முன்மொழிவுகள் மற்றும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்த பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க புத்தம் புதிய கல்வி சீர்திருத்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என்றும் செயலாளர் கூறினார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X