2025 ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை

கல்கிஸை துப்பாக்கிப் பிர​யோகத்தில் :கோஸ் மல்லியின் கூட்டாளி பலி

Editorial   / 2025 ஜனவரி 19 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை சிறிபால பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 24 வயதான நபர் மரணமடைந்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் நடத்திய தேடுதலில், தேபொல கௌடான ​பிரதேசத்தில் வைத்து, துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார். துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்ட 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் 47 வயதானவர் என்றும், அவர் இதற்கு முன்னர் நடத்திய  மனித படுகொலையின் சந்தேக நபர் என்றும் ​பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X