2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கற்பிட்டி விவகாரம்: இரு முனைகளில் விசாரணை

Editorial   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - கற்பிட்டி கண்டல்குளி பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை (26)  மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளம் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி - கண்டக்குளி பகுதியில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு சொந்தமான துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் துப்பாக்கி பயிற்சியில்  ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மேற்படி  இளம் விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த சம்பவத்தில் இன்னொரு விமானப்படை வீரர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் இலங்கை விமானப்படையினரும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .