2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கறுப்பு சால்வையில் சபைக்கு வந்த வெதஆராச்சி

Editorial   / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீனவர்களின் அவல நிலையை நாட்டுக்கு காட்ட வேண்டும் என்று கூறி கறுப்பு சால்வை அணிந்து பாராளுமன்றத்திற்கு   ஐக்கிய மக்கள் சக்தியின்  ஹம்பாந்தோட்டை மாவட்ட சபை உறுப்பினர் துலிப் வெதஆராச்சி, கறுப்பு சால்வாயை அணிந்துகொண்டே உரையாற்றினார்.

கடற்றொழில் அமைச்சு மீதான பாராளுமன்ற வரவு- செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வெதஆராச்சி, தற்போது சுமார் மூவாயிரம் மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வற்வரி அதிகரிப்பினால் மீனவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று தெரியவில்லை எனவும் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

​​தான் அணிந்திருக்கும்  கறுப்பு சால்வை மீனவர்களின் வேதனையை காட்டுவதாக குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .