2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கம்பஹாவில் வெள்ள அபாயம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவி வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாக, கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்தார்.

நேற்று (11) இரவு 9 மணி நிலவரப்படி, நீர்மானியின் நீர்மட்டம் 5.54 மீற்றராக காணப்படுவதாகவும், இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பிரதிப் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.(AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X