Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 மே 09 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுட்டெரிக்கும் வெயிலை தாங்கிக்கொள்வதற்கு பலரும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதில், வீட்டு, கதவு, ஜன்னல்களை திறந்துவைத்தாலும் காற்று வருவது குறைவாகவே இருக்கும். எனினும், தவிர்க்க முடியாத காரணத்தால் திறந்து வைக்கவே வேண்டும்.
வீட்டில், கதவு, ஜன்னல்கள் திறந்திருப்பதை அவதானிக்கும் கள்வர்கள் கைவரிசையை காண்பித்துவிடுகின்றனர். எனினும், சென்னையில் பாலியல் பலாத்கார சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட வெளியே சென்று விடுவதால் இளம்பெண் வீட்டில் மகள்களுடன் இரவில் தனியாக இருந்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (07) இரவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது போதை ஆசாமி ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிட முயன்றுள்ளார். ஆனால் கூச்சலிட்டால் பெண் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று அந்த நபர் மிரட்டியுள்ளார்.
பின்னர் கத்திமுனையில் அந்த பெண்ணை போதை ஆசாமி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஒட முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போதை ஆசாமியை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் போதையில் பலாத்காரத்தில் ஈடுபட்ட கோயம்பேடு பகுதியை சேர்ந்த (38) நபர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago