2024 டிசெம்பர் 19, வியாழக்கிழமை

கைதிகளுக்கு இடையில் தகராறு ; இருவர் காயம்

Janu   / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு கைதிகள் காயமடைந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (19) இன்று இடம்பெற்றதாக சிறைச்சாலை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

காலி மீட்டியாகொடை பிரதேசத்தில் திங்கட்கிழமை (16)  அன்று  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டில்  காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த இரு கைதிகளும் பூஸா சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .