2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கணவருடன் உடலுறவு: மனைவி கைது

Editorial   / 2024 ஜூன் 24 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கணவருடன் உறவு கொண்ட பெண்ணிடம் ஐம்பது இலட்சம் ரூபா கப்பம் கோரி, அந்த நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உடலுறவுக் காட்சிகளின் காணொளிகளை இணையத்தில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிளே லிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 இந்தக் குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் பன்னிப்பிட்டிய தெபானம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.  இருவரும் பல தடவைகள் உடலுறவு கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இருவரும் உடலுறவில் ஈடுபடும்போது, அதனை பொலிஸ் கான்ஸ்டபிள் தனது அலைதொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கணவரின் அலைபேசியில் காணப்பட்ட வீடியோக்களை தனது கணவருடன் உடலுறவு கொண்ட பெண்ணிடம் காட்டி, இவற்றை இணையத்தில் வெளியிடாமல் இருக்கவேண்டுமாயின் ஐம்பது லட்சம் ரூபாவை தனக்கு கப்பமாக தருமாறு ​அப்பெண் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பில், குறித்த பெண் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்துக்குச் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அந்த பணியகத்தின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து ஓய்வு பெற்ற பெண் கான்ஸ்டபிள் மற்றும் அவரது கணவரான கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .