2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

’குடு தேவி’ கைது

Editorial   / 2024 ஒக்டோபர் 30 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

'குடு தேவி' என்றழைக்கப்படும், 32 வயதான பெண், பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

24 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன், மேற்படி பெண், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால், புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண், தற்போது புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் கணேமுல்ல சஞ்சீவ மற்றும் தற்போது வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் கலன நேமட்ட ஆகியோரால் அனுப்பிவைக்கப்படும் போதைப்பொருள்களை, இலங்கையில் விநியோகம் செய்பவர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X