2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கடற்படைச் சிப்பாய் துப்பாக்கியுடன் மாயம்

Mayu   / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்குச் சொந்தமான சரக்குகளை கடற்படை லொறியில் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் உத்தியோகபூர்வ T-56 துப்பாக்கி மற்றும் முப்பது தோட்டாக்கள் அடங்கிய மகசீனுடன் காணாமல் போயுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி லொறியின் பாதுகாப்பில் இருந்த திருகோணமலை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் என சந்தேகிக்கப்படும் மாலுமி. திங்கட்கிழமை (24) இரவு கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது, ​​வரக்காபொல வாரயகொட பகுதியில், தனது சகோதரர் வீட்டில் இருந்து இரவு உணவு கொண்டு வருவதாக கூறி இரவு உணவு கொண்டு வர லொறியில் இருந்து இறங்கிய போதும், அவர் திரும்பி வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் திரும்பி வராத நிலையில், வாகனத்தின் சாரதியாக இருந்த கடற்படை வீரர் சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸாருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X