2025 மார்ச் 15, சனிக்கிழமை

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தீர்மானம்

Simrith   / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானுடனான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) பரிமாற்ற ஆவணங்களிலும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான கலந்துரையாடல்களின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியின் முன்மொழிவின் அடிப்படையில், தேவையான ஆவணங்களுக்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார், மேலும் அமைச்சரவையும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .