2025 மார்ச் 19, புதன்கிழமை

கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் முடிவு

S.Renuka   / 2025 மார்ச் 19 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன்கிழமை (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளல் கடந்த 3ஆம் திகதி தொடங்கியது.

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடையவுள்ளது.

அத்துடன், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும், திங்கட்கிழமை (17) நிலைவரப்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வைப்புத்தொகை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X