2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கொட்டாஞ்சேனையில் நாளை போக்குவரத்து கட்டுப்பாடு

Editorial   / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொட்டாஞ்சேனை  பொலிஸ்  பிரிவு மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில்    திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார்  அறிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் வரையில் ஊர்வலம் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோணியா தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு ஆராதனை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

ஊர்வலம் கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி போன்ஜின் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கல்பொத்த சந்தியிலிருந்து கல்பொத்த வீதி வழியாக ஜம்பட்டா வீதிக்குச் சென்று ஜம்பட்டா வீதி வழியாக கரையோர புனித அந்தோணியார் தேவாலயம் வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கரையோர பொலிஸ் பிரிவில் உள்ள வீதிகள் காலை 07.00 மணி முதல் காலை 11.45 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் தெரிவித்துள்ளனர். .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X