2025 மார்ச் 15, சனிக்கிழமை

கஞ்சா எண்ணெயுடன் கைதான அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

Freelancer   / 2025 மார்ச் 15 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயன்றதற்காக சுங்க பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.  

அமெரிக்காவிலிருந்து மாலபே பகுதியில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட 3 கிலோகிராம் 200 கிராம் கஞ்சா எண்ணெய் பொதியை சுங்க பரிசோதகர் விடுவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுங்க பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .