2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

எரிபொருள் பிரச்சினை: புதிய சுற்றறிக்கை வெளியானது

Editorial   / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வாகனங்களுக்காக எரிபொருள் பயன்படுத்தப்படும் போ​து பின்பற்றவேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள, மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சுகளுக்கான செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அத்தியாவசியமற்ற பயணத்தை மேற்கொள்ளும் போது, அரச வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதே​​போல கொழும்பில் நடைபெற்று மாநாடுகள் மற்றும் கருத்தரங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து  அரச அதிகாரிகளை அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .