Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 03 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு மற்றும் குளறுபடி தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்ஜ குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் தள்ளுபடி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு முயற்சிப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன
அதன்படி, இந்த முறைப்பாடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவு மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
சாதாரண பொது வாழ்க்கையை சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை உருவாக்கி, பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்துபவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago