2024 நவம்பர் 14, வியாழக்கிழமை

எரிபொருள், மின் கட்டணம் குறையும் ; ஜனாதிபதி உறுதி

Freelancer   / 2024 நவம்பர் 09 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார கட்டணத்தை 30 சதவீதத்திற்கு மேல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 

கடந்த காலங்களில் நிலவிய குடும்ப அரசியல், ஊழல் அரசியல் முடிவுக் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் நாட்டை சுத்தப்படுத்துவோம். 

பொதுமக்களை அநியாயமாகக் கொலை செய்த அனைவரும் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படும். 

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாட்களில் ஒரு நற்செய்தியை மக்கள் எதிர்பார்க்க முடியும். ஒன்றரை வருடத்தில் மின்சார விநியோக துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

மின்கட்டணத்தை 30 சதவீதக்கு மேல் குறைப்போம். 

அதற்காக சிறிது அவகாசம் தேவைப்படுகிறது. எரிபொருள் விலையைக் கூட குறைப்பதற்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதுடன், மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களும் வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .