2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

எம்.பி.க்களின் சம்பளம், 24% உயர்வு

Editorial   / 2025 மார்ச் 27 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய திருத்தங்களின் படி, எம்.பி.க்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆக 24% அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது தினசரி கொடுப்பனவு(Allowance) ரூ.2,000 இலிருந்து ரூ.2,500 ஆக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளில் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே மத்திய அரசு அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத சம்பளம் 24% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X