2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த அர்ஜுனா இராமநாதன்

Editorial   / 2024 நவம்பர் 21 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, வியாழக்கிழமை (21) காலை 10 மணிக்கு கூடியது.

அதற்கு முன்னதாகவே உறுப்பினர்கள் சபைக்குள் பிரவேசித்துள்ளனர். 

அப்போது வந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ஜுனா இராமநாதன்  சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து விட்டார்.

அது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம், எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்டுள்ளார்.

இது தொடர்பிலான ​வீடியோ வைரலாகியுள்ளது.

புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது, சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற, சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன்  என அர்ஜுனா இராமநாதன் பதிலளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X