2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி முயற்சி?

Freelancer   / 2024 நவம்பர் 22 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற பிரிவினரை மீண்டும் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான  பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். 

 மேலும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களை இந்தக் குழுவில் சேர்ப்பது குறித்தும், மொட்டு கட்சி கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X