2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்துச் செய்தி

Freelancer   / 2025 ஏப்ரல் 14 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

துக்கம் கண்ணீர் இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டுக்காக ஒன்றிணைவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் செல்லுவதை பாரம்பரியமாக புத்தாண்டின் பிறப்பு அல்லது சூரிய பகவானைக் கொண்டாடுவதற்கு இந்நாட்டு மக்கள் தொன்றுதொட்டு செயல்பட்டு வருகின்றனர். இக்காலத்தில் மரங்கள் கனிகளால் நிறைந்து, விளைச்சல் செழித்து, களஞ்சியங்கள் நிரம்பி, அனைவரின் உள்ளங்களிலும் செழிப்பின் ஒளி பிறக்கும்.

சிங்கள தமிழ் புத்தாண்டு என்பது சரியான நேரத்தில் துல்லியமாக செயல்படுவதை பழக்கப்படுத்திய, நன்றி உணர்வை வளர்த்தெடுத்த கலாசார விழாவாகும். மேலும், இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறுதியான தொடர்பையும், ஒருவருக்கொருவர் இடையேயான உறவுகளின் மதிப்பையும் வெளிப்படுத்தும் இவ்விழா, அனைத்து வேறுபாடுகளையும் மறந்து புதிய மனிதர்களாக முன்னேறுவதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.

இந்த புத்தாண்டில் வழக்கமான சவால்களுடன் புதிய சவால்களும் நம் முன் உள்ளன. அவற்றை சரியாக நிர்வகித்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். அத்தகைய சூழ்நிலைகளில் குறுகிய கருத்தியல்களில் ஒட்டிக்கொண்டிருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். 

எனவே, இதன் உண்மையான பொருளை புரிந்துகொண்டு, கூட்டு முயற்சியின் மூலம் நமக்கு எதிரான சவால்களை வென்று அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த புத்தாண்டிற்கு நாம் அனைவரும் செயல்பட வேண்டும். ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக எதிர்கொண்டு, அந்த சவால்களை வென்று அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பை நோக்கிய இந்த பயணத்தில், அனைவரின் உள்ளங்களிலும் துக்கம், கண்ணீர், வலி இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டிற்காக ஒன்றிணையுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X