2025 மார்ச் 19, புதன்கிழமை

எட்டு பொருட்களின் விலைகள் குறைப்பு

S.Renuka   / 2025 மார்ச் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம்  குறைத்துள்ளது. 
 
அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும். 
 
ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய் ஆகும். 
 
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 162 ரூபாய் ஆகும்.  
 
ரின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாய் ஆகும்.  
 
அத்துடன், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 185 ரூபாவாக உள்ளது. 
 
ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌப்பியின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 750 ரூபாய் உள்ளது. 
 
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 160 ரூபாய் என பதிகாகியுள்ளது. 
 
ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 575 ரூபாவாகவும் காணப்படுகின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X