Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்துள்ளதாகவும், நுகர்வோர் ஒரு முட்டையை 40, 42 மற்றும் 43 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியுமென முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“65 மற்றும் 70 ரூபாவாக அதிகரித்திருந்த முட்டையின் விலை வீழ்ச்சிக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம்” என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி பண்ணையில் இருந்து ஒரு வெள்ளை முட்டை 37 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை 38 ரூபாய்க்கும் விற்பனைச் செய்ய முடியும் என்றார்.
முட்டை உற்பத்தியும் கணிசமான அளவு அதிகரித்து வருவதாகவும், மாதத்திற்கு ஐந்து .லட்சம் முட்டைகள் உற்பத்தியாகி, இம்மாதம் 60 இலட்சம் அல்லது 65 இலட்சமாக உற்பத்தி அதிகரித்துள்ளதாக தலைவர் சரத் தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டு முட்டைகளை மக்கள் தேவையான அளவு கொள்வனவு செய்ய முடியும் எனவும் எதிர்காலத்தில் முட்டையின் விலை மேலும் குறையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தி அதிகரித்து வருவதாலும், நாட்டுக்குத் தேவையான முட்டை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாலும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, டிசெம்பருக்கு பின்னரும் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் அறிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
36 minute ago
46 minute ago