Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரச நிர்வாகம். உள்நாட்டலுவல்கள். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சு ஆலோசனைக் குழு அங்கீகரித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமையால். அதற்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதமர் மற்றும் பொதுநிர்வாக. உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனைக் குழு புதன்கிழமை (20) கூடியது.அந்த கூட்டத்தில்தான் வேட்புமனுக்களை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும்இ கள அலுவலர்கள் தங்கள் தேர்தல் பகுதியில் வாக்குக் கோருவதற்கு உள்ள தடைகள் குறித்தும்இ அந்த தடைகளை நீக்குவதற்கு தேவையான சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், சேவை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம் மற்றும் பிராந்திய செயலாளர்களை இடமாற்றம் செய்தல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள் உரிய முறையில் நியமிக்கப்படாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, பிராந்திய செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாக அதிகாரிகளின் பணியிடங்களை முறையாகச் செய்து, அதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago