2024 ஒக்டோபர் 23, புதன்கிழமை

உதயராசாவின் வேட்புமனுவை ஏற்குமாறு உத்தரவு

Simrith   / 2024 ஒக்டோபர் 23 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் மாவட்ட தேர்தல் அதிகாரி, பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனுவை நிராகரித்ததாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட தேர்தல் அலுவலரின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்று கூறி, அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

உண்மைகளை கருத்திற்கொண்டு, பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை அங்கீகரிப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜரானார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .