Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.ஜி கபில
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 50 ஊழியர்கள், தொழிற்சாலை வழங்கிய காலை உணவை உண்ட பின்னர், வியாழக்கிழமை (05) காலை 09.00 மணியளவில் சுகவீனமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஊழியர்கள் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 02 மற்றும் இலக்கம் 03 இல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நோய்வாய்ப்பட்ட ஊழியர்களுக்கு மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டுநாயக்க பொலிஸார், நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார், சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
8 hours ago