Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Simrith / 2024 நவம்பர் 24 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஆண்டு இந்தியாவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆவணத்தை தனக்குப் பின் பதவியேற்ற அனுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திசாநாயக்க, டிசம்பர் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஜூலை 2023 இல் தனது இந்தியப் பயணத்தின் போது, அப்போதைய ஜனாதிபதி விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பின் பகுதிகள், குறிப்பாக பொருளாதாரக் கூட்டாண்மை வலியுறுத்தும் தொலைநோக்கு ஆவணத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கையெழுத்திட்டார்.
“நானும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கையெழுத்திட்ட ஆவணத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பகுதிகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அதை அவர் (திஸாநாயக்க) முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும், இந்த தொலைநோக்கு ஆவணத்தை நாம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நான் கருதுகிறேன், ”என்று அவர் PTI (இந்திய செய்தி நிறுவனம்) இடம் கூறினார்.
இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் வித்யா விஹார் பாடசாலையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விக்கிரமசிங்க, திஸாநாயக்க அடுத்த மாதம் புது டில்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பிற இந்திய தலைவர்களை சந்திக்கும் போது பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து வினவிய போது பதிலளித்தார்.
விக்கிரமசிங்கவின் சுற்றுப்பயணத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆவணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடல், வான், எரிசக்தி உறவுகள் மற்றும் மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது. சுற்றுலா, மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்தவும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஸ்ரீ சத்ய சாய் வித்யா விஹாரில் விளையாட்டு வளாகத்தை திறந்துவைத்த விக்கிரமசிங்க, பின்னர் “பொது பாரம்பரியம்: இந்தியாவும் இந்தியப் பெருங்கடலும்” என்ற தலைப்பில் பார்வையாளர்களுக்கு உரையாற்றினார்.
இலங்கையின் இக்கட்டான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் உதவியைப் பற்றி குறிப்பிட்ட அவர், தனது வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்த மரபு மூலம் தனது நாடு பயனடைந்துள்ளது என்றார்.
விக்ரமசிங்கே, நிதி உதவிக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
பாடசாலைக் கூட்டத்தில் வெவ்வேறு எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டிய விக்கிரமசிங்க, இந்தியாவும் இலங்கையும் பண்டைய காலங்களிலிருந்து மத, வணிக, மொழி மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுக் காட்டினார்..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago