2024 ஒக்டோபர் 24, வியாழக்கிழமை

உடனடியாக 1997 க்கு அழையுங்கள்...

Freelancer   / 2024 ஒக்டோபர் 23 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக இன்று முதல் 1997 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தமது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை குறித்து இந்த இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .