Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Simrith / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, உயிர்த்த ஞாயிறு தின சிறப்பு செய்தியில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் யார், அந்தக் கொடூரமான செயலுக்கு உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவது அவசரமான விடயம் என்று வலியுறுத்தியுள்ளது.
"இந்த உயிர்த்த ஞாயிறு தினம், 2019 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் அப்பாவி வழிபாட்டாளர்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதன் ஆறாவது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர்.
இந்த மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தால் சில நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் கவனிக்கிறோம்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம் என்றாலும், நியாயம் மற்றும் நீதியின் அடிப்படையில், விசாரணைகளின் இறுதி நோக்கம் குற்றவாளிகள் யார், அந்தக் கொடூரமான செயலில் உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
"நமது நாட்டின் தலைவர்களுக்கான ஞானம் மற்றும் தைரியத்திற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் மற்றும் குணப்படுத்துதலுக்காகவும் நாங்கள் தொடர்ந்து மனதார பிராத்திப்போம்" என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் பிஷப் ஹரோல்ட் அந்தோணி பெரேரா மற்றும் செயலாளர் நாயகம் பிஷப் அந்தோணி ஜெயக்கொடி ஆகியோர் கையெழுத்திட்ட செய்தியில் தெரிவித்தனர்.
"மனித வாழ்வின் புனிதத்தை புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் ஊக்குவிக்க உயிர்த்த ஞாயிறு நம்மை அழைக்கிறது. எனவே, மனித வாழ்வின் மேம்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களான இனப்பெருக்கத்தில் தலையிடுதல், கருக்கலைப்பு மற்றும் பிற வகையான கொலை மற்றும் மனித வாழ்வை அழித்தல் போன்ற அனைத்தையும் நாம் கண்டிக்க அழைக்கப்படுகிறோம்" என்று குறித்த செய்தி அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
38 minute ago
49 minute ago