2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

இஸ்ரேலில் பதற்றம் - இலங்கையர்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Freelancer   / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேவையற்ற பயணங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுங்களுமாறும், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் PIBA வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .