2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

“இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை”

Janu   / 2025 மார்ச் 10 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் கும்பலை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள  இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகளை குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பவ தினமான பெப்ரவரி  மாதம் 19 ஆம் திகதி சில மணி நேரத்திற்குள்ளே செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்  நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு."

புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறான  சம்பவங்களின் போது, ​​பல்வேறு வதந்திகள் பரப்பி விசாரணைகளை திசை திருப்புவதற்காக சிலர் இதுபோன்ற தகவல்களை வெளியிடுகின்றனர். செவ்வந்தியை கைது செய்வதற்கு புலனாய்வுக் குழுக்கள்  தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .