2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இளைஞன் மாயம்; பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்

Freelancer   / 2023 ஜூன் 16 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளையில் இ.பி.கசுன் சம்பத் என்ற 29 வயதுடைய இளைஞன் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞன், வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள நிறுவனமொன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

இவ்வாறு பணிபுரிந்து கொண்டிருந்த இளைஞன், கடந்த 12ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்குப் பின்னர் திடீரென மாயமானார் என்று வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞளை யாராவது கண்டால் உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கு அல்லது 0766689959, 0772190251 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .