Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 22 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலையந்தடி கடற்கரையோரத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த ஒரு கொகை மஞ்சள் மூடைகளுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை பொலிஸாரருக்கு செவ்வாய்க்கிழமை (21) கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கடற்பிரதேசத்தில் இருந்து லொறியொன்றின் மூலம் கொண்டு செல்ல தயாராக இருந்த 51 மூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 2,000 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சளின் பெறுமதி 1.2 மில்லியன் ரூபாய் என மதிப்பீடு செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சளையும் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச் சம்பவம் தெடார்பில் நுரைச்சோலை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago