2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு உலக உணவுத் திட்டம் ஆதரவு

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  முற்பகல் இடம்பெற்றுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அதன் பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது குறைவாக உள்ள போதிலும், தேவை ஏற்படும் போது புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X