2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இலங்கை வரும் வாகனங்களைத் தாங்கிய கப்பல்

Freelancer   / 2025 பெப்ரவரி 08 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டதன் அடிப்படையில் , எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே வாகனம் வாங்க காத்திருப்போர் அதுவரையில் முற்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .