2025 மார்ச் 06, வியாழக்கிழமை

இலங்கையில் 3,000 பெருங்குடல் புற்று நோயாளர்கள்

S.Renuka   / 2025 மார்ச் 06 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய்  அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், சுமார் 3,000 பெருங்குடல் புற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குளோபோகன் (Globocan)  2022 தரவுகளின்படி, உலகளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும், இறப்புகளின் எண்ணிக்கை 900,000 ஐ தாண்டியுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது பெரும்பாலும் முழுமையான குணப்படுத்துதலுக்கு வழிவகுக்கும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் டாக்டர். ஹசராலி பெர்னாண்டோ கூறினார்.

வயதுக்கு ஏற்ப, குறிப்பாக 50 வயதிற்குப் பிறகு, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றால் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கிறது என்று பெர்னாண்டோ எடுத்துரைத்தார்.

இதற்கிடையில், பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். 2040ஆம் ஆண்டளவில் சுமார் 3.5 மில்லியன் நோயாளிகள் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று வசந்த விஜேநாயக்க கூறினார்.

“40 வயதிற்குப் பிறகு, சுமார் 50 சதவீதமானோருக்கு பாதிப்புக்ககள் இருக்கலாம், அவை பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்படும் வளர்ச்சிகள். ஆனால் எல்லா பாதிப்புக்களும் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை, அவற்றில் சுமார் 4 சதவீதம் மட்டுமே புற்றுநோயாக மாறக்கூடும்” என்று அவர் கூறினார். 

இந்த செயல்முறை 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும் என்றும், இந்த நேரத்தில் அடையாளம் காணப்பட்ட பாதிப்புக்களை அகற்றி நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் விஜேநாயக்க கூறினார்.

மேலும், 23 ஆண்களில் ஒருவருக்கும், 26 பெண்களில் ஒருவருக்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .