2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் 24 மணிநேரத்தில் 13 பேர் மரணம்

Freelancer   / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன், பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, கெப்பத்திகொல்லாவ மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 4 பாதசாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் வீதிகளில் பயணிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X