2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இரண்டு தலைகள் மோதியதால் இருவர் பலி

Editorial   / 2023 ஜூலை 02 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்வாயில் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், மரணமடைந்த சம்பவம், ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.

கால்வாய்க்கு அருகில் இருந்த மரமொன்றில் ஏறி, கால்வாய்க்குள் குதித்துக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 12 மற்றும் 15 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவரே மரணமடைந்துள்ளனர்.

மரத்திலிருந்து அவ்விருவரும் ஒரே நேரத்தில் பாய்ந்த போது, இருவரின் தலைகளும் மோதியதில், கால்வாய்க்குள் விழுந்து மீண்டெழ முடியாத நிலையில் அவ்விருவரும் மரணமடைந்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருவருடன் நீந்திக் கொண்டிருந்த சுமார் 8 சிறுவர்கள், “அண்ணாமார்கள் இருவரும் எங்களைப் பயமுறுத்துவதற்காக தண்ணீருக்கு அடியில் ஒளிந்திருக்க வேண்டும்” என்று கூறி, தண்ணீரில் இருந்து வெளியே வந்து தங்கள் வீடுகளுக்குச் சென்று பெரியவர்களிடம்  தெரிவித்தனர்.

அதன்பின்னர் ஓடோடிவந்து தேடிய போதே, இவ்விருவரின் சடலங்களும் நீருக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .