Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 25, புதன்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய சார்ஜன் தர அதிகாரி ஒருவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.
குருநாகலைச் சேர்ந்த ரவித்த ரங்கன திஸாநாயக்க (வயது 35) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
2007 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட அவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தார்.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நெஞ்சுவலி காரணமாக பலாலி இராணுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். எனினும், அவர் நேற்றுமுன்தினம் நண்பகல் உயிரிழந்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
45 minute ago
48 minute ago
1 hours ago