Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Janu / 2024 நவம்பர் 26 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரட்டைய சகோதரனுடன் ஒரே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மற்றைய சகோதரன் திடீரென காணாமல் போயுள்ள சம்பவம் மில்லனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பண்டாரகம பல்லந்துடாவ ஸ்ரீ ஞானரதன வீதியை சேர்ந்த , மொரட்டுவ கட்டுபெத்த ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில் கல்வி பயிலும் 21 வயதுடைய சானுக கிம்பார பெரேரா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இரட்டை சகோதரர்கள் ஞாயிற்றுக்கிழமை (24) அன்று வழமைபோல பெற்றோருடன் உணவருந்திவிட்டு அவர்களின் அறைக்கு சென்றுள்ளதுடன் காணாமல் போயுள்ள இளைஞன் தனது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், மற்றைய ச இளைஞன் உறங்கியுள்ளார்.
திங்கட்கிழமை (25) அதிகாலை 4.30 மணியளவில் இருவருக்கும் உணவு சமைப்பதற்காக எழுந்த தாய் வீட்டின் கதவு பாதி திறந்து கிடந்ததை கண்டு அதை மூடிவிட்டு, இரு மகன்களும் தூங்கிக் கொண்டிருந்த அறையை பார்த்த போது மூத்த மகனை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago