2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

இராட்சத காற்றாலை கோபுரம் இடிந்து வீழ்ந்தது

Freelancer   / 2025 பெப்ரவரி 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்பிட்டி - துடாவ பகுதியில் கந்தகுளிய பிரதேசத்தில் நேற்று காற்றாலை மின் உற்பத்தி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை கோபுரத்தின் ஒரு பகுதி திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்விடத்தில் குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து காற்றாலை கோபுரங்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றின் ஒரு பகுதி இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

இந்தக் காற்றாலை விசையாழிகளில் ஒன்று 270 அடிக்கு மேல் உயரமும், அங்கு நிறுவப்பட்ட தளம் சுமார் 129 அடி நீளம் கொண்டது.

காற்றாலை கோபுரம் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றிலுமாக சேதமடைந்ததோடு, அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இருப்பினும், கோபுரம் இடிந்து விழுந்த நேரத்தில் வீடுகளில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X