2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

இன்று உயர் நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி

S.Renuka   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (29)  காலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் அண்மையில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை (29)  நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .