Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 21 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதாகிய 12 இந்திய மீனவர்களையும், நிபந்தனைகளுடன் விடுதலை செய்து பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், கடற்படையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் விளக்கமறியலை நீடித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த நவம்பர் 12 ஆம் திகதி அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணையின் பின்னர் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அன்றைய தினமே அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது நேற்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து குறித்த 12 மீனவர்களும் நேற்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்திய மீனவர்களுக்கு எதிராக நீரியல்வளத்துறை அதிகாரிகளால் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் 18 மாதகால சாதாரண சிறைத் தண்டனை விதித்து அதனை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனையுடன் விடுவித்தும், படகு உரிமையாளர் மற்றும் படகோட்டி ஆகிய இருவருக்கும் எதிரான வழக்குகளை பின் தவணையிடப்பட்டும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கைது நடவடிக்கையின் போது கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் குறித்த மீனவர்களுக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கினை விசாரித்த பருத்தித்துறை நீதவான் 12 மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து உத்தரவிட்டிருந்தார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
19 minute ago