Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் நடைபெறும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் தரணி முருகேசன் இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று ராமநாதபுரம் வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் புதிய ஜனாதிபதி வந்த பிறகு கைதுகள் அதிகரித்துள்ளன. மீனவ பிரச்சினையை சட்டம் ஒழுங்காகவோ, எல்லை பிரச்சினையாகவோ அணுகாமல் மனிதாபிமான பிரச்சினையாக அணுக வேண்டும், என்றே இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது. மீனவர் பிரச்சினை தொடர்பாக நான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்திற்கு, அவர் எழுதிய பதில் கடிதத்தில் இந்தியா-இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் நடைபெறும், என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் என்றார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago