Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை
Simrith / 2025 ஜனவரி 09 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ போன்ற பல்வேறு தேசிய வேலைத்திட்டங்கள் மூலம் அதை மூடிமறைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.
பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 49 நாட்கள் கடந்துள்ள நிலையில், இது களனிப் பல்கலைக்கழக மாணவர் சபையல்ல , தேசத்தை ஆளும் சபை என்பதை அரசாங்கம் மறந்துவிட்டமையே இப்போது வெளிவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயவீர இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
“இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். ஆனால் உங்களின் சில உறுதிமொழிகள் அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்பட்டவை. அரசாங்கத்தில் உள்ள உங்களில் எவரேனும் லாப நஷ்டக் கணக்கைச் செய்திருந்தால், உங்கள் உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்ற முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் வருமானம் இல்லாமல் செலவு செய்ய முடியாது,'' என்றார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மேலும் தெரிவித்தார்.
“க்ளீன் ஸ்ரீலங்கா போன்ற திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கம் தனது முன்னைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக பொதுமக்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது. குடிமக்களிடமிருந்து இதுபோன்ற எதிர்பார்ப்புகளுடன் நாடு முன்னேற முடியாது. நாம் அவர்களுக்கு நம்பிக்கையை மட்டும் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது, நாம் ஏதாவது நிறைவேற்ற ஆரம்பிக்க வேண்டும். மக்கள் இக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனர்,'' என்றார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை ஒப்புக்கொள்வன் மூலம் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும், இது புதிய அரசியல் சகாப்தத்தின் உதயமாகும் என்றும், இது பொதுமக்களால் பெரிதும் மதிக்கப்படும் என்றும் எம்.பி.ஜெயவீர கூறினார்.
தோல்வியுற்ற உறுதிமொழிகள் தொடர்பாக அரசாங்கத்தை கடுமையாக சாடும் எம்.பி.ஜெயவீரின் அறிக்கையை எதிர்த்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
பத்திரிகைகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சேறு பூசும் பிரச்சாரத்தை கடுமையாக சாடிய திலித் , நாட்டில் ஒழுக்கமான பாராளுமன்றத்தை நிறுவும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிப்பது வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
“எப்படி தெரண (தொலைக்காட்சி அலைவரிசை) நல்லதாகவும், அருண (பத்திரிகை) கெட்டதாகவும் இருக்க முடியும்? எனக்குச் சொந்தமான மோர்னிங் மற்றும் பல்ஸ் போன்றவையும் என்னுடையவை தான், அவற்றின் உரிமையாளர் நான் என்பதால் அவை நல்லவை கெட்டவை எனத் தீர்மானிக்கப்படுமா? நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போதும் நீங்கள் அதைக் கண்காணித்தீர்கள். நான் முன்மாதிரியான ஊடகத்துறைக்காக பாடுபட்ட ஊடக உரிமையாளர்” என திலித் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago