Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஊழியர்களை விடுவிக்கவும், அவர்களது முந்தைய பணியிடங்களில் மீண்டும் பணியில் அமர்த்தவும், அபராதங்களில் இருந்து விடுவிக்கவும் CEB நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான கடிதங்களை அமைச்சர் ஜெயக்கொடி நேற்று (24) வழங்கினார்.
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் திட்டம் இருப்பதாகக் கூறி, அதற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
அப்போதைய மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் கடமைகளை புரியாதவர்களை பணி இடைநிறுத்தம் செய்வதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago