Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடமைக்குச் செல்வதாகக் கூறி டி-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பயிற்சிப் பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய், தந்தை மற்றும் மற்றொரு கான்ஸ்டபிள் ஆகியோர் திங்கட்கிழமை (10) இரவு கைது செய்யப்பட்டதாக கல்கிசை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கான்ஸ்டபிள் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முந்தைய செய்தி https://shorturl.at/vYuH1
கல்கிசை பொலிஸில் பணியாற்றும் புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், T-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அந்த கான்ஸ்டபிள் சனிக்கிழமை (8)இரவு டுபாய்க்கு சென்றுவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8 ஆம் திகதி மாலைநேரத்தில் அப்பகுதியில் வீதி சோதனை பணிகளைச் செய்ய இந்த அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் செல்வதற்கு 18 நிமிடங்களுக்கு முன்பு, பொலிஸ் நிலைய ஆயுதக் கிடங்கில் இருந்து T-56 துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வீதி சோதனை பணிக்கு வரவில்லை என்று மூத்த அதிகாரி கூறினார்.
மேலும், கான்ஸ்டபிள் சம்பவ இடத்தை விட்டு வெளியேறும்போது எந்த குறிப்புகளையும் எடுக்கவில்லை அல்லது பொறுப்பான அதிகாரிக்கு தெரிவிக்கவில்லை என்றும், அவரது தனிப்பட்ட தொலைபேசியும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் சர்வதேச பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது என்றும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
11 minute ago
50 minute ago