2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆபத்தான போதைப்பொருள்கள் சிக்கின

Editorial   / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் போலியான சில விலாசங்களுக்கு கூரியர் பொதிகளாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள 7 பொதிகளில், 6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை ஆபத்தான போதைப்பொருள்கள் என இனங்காணப்பட்டுள்ளன.

​“கொலம்போ கார்கோ” என்ற தனியார் சரக்கு அகற்றும் நிறுனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த அந்த பொதிகள், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால், வியாழக்கிழமை (07) கைப்பற்றப்பட்டன.

இந்த ஏழு பொதிகளிலும், 08 கிலோ கிராம் குஷ் என்ற கஞ்சா, 160 கிராம் மண்டி, 350 எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் 08 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பொதிகளை, உரிமையாளர்கள் இரண்டு மாதகாலமாக எடுத்துச் செல்லாமல் இருந்தமையால், அந்த விலாசங்கள் தொடர்பில் தேடிபார்த்த போது அவை போலியானவை என இனங்காணப்பட்டன. அதனையடுத்தே  அந்தப் பொதிகளை உடைத்து சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் தீர்மானித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .