2025 மார்ச் 13, வியாழக்கிழமை

அ‘புரம் சம்பவம்: நீதவான் அதிரடி உத்தரவு

Editorial   / 2025 மார்ச் 12 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய,அனுராதபுரம் தலைமை பொலிஸ் ஆய்வாளர் ஆர்.என்.கே. ஜெயவீரவுக்கு, புதன்கிழமை (12) மாலை  உத்தரவிட்டார்.

மருத்துவரிடமிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் அலைபேசியில் இருந்து எடுக்கப்பட்டட மற்றும் பெறப்பட்ட அழைப்புகளின் பதிவை வழங்குமாறு டயலொக் நிறுவனத்துக்கு நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸார் ”பி” அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்ததை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .