Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Janu / 2024 நவம்பர் 13 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பாக பிர்தௌஸ் நளீமியினால் செவ்வாய்க்கிழமை(12) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவை தயாரித்தவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர்கள், பகிர்ந்தவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், தனது சட்டத்தரணிகள் ஊடாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிர்தௌஸ் நளீமி தெரிவித்துள்ளார்.
எம். எஸ். எம். நூர்தீன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago